Tuesday, 18 October 2016

2015-16 போனஸ்... 

3வது ஊதிய மாற்றம்.. 

தேக்கநிலை தீர்த்தல் ... 

புதிய ஓய்வூதிய திட்டம்... 

CDA 55 ii (b)ஐ ரத்து செய்தல்.. 

 4வது சனிக்கிழமை விடுமுறை... 

வணிகப்பகுதி மாற்றங்கள்...

மருத்துவத் திட்ட மேம்பாடு.. 

இலாக்காத்தேர்வுகளில் தளர்வு..

 பதவி உயர்வு பாதகங்கள் களைவு...

 RM ஊழியர்களுக்கு பதவி உயர்வு

 என பல காலமாக BSNLலில் தீர்க்கப்படாத 11 அம்சக்கோரிக்கைகளைத் தீர்க்கக்கோரி தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பாக 18/10/2016 அன்று நமது தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம். 

 

 

Tuesday, 20 September 2016

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து........... 

ஆம்! உலகப்பொதுமறை என்றும் தோற்றதில்லை.

இதனை NFTE சங்கம் முடிக்கும் என்றாய்ந்து அங்கீகாரம் தந்தார்கள் தோழர்கள்.. போனஸ் பெற்று தரும் என்று நம்பினார்கள்..அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. சாதனைகள் பல படைக்கும் NFTE சங்கம்; வேதனைகள் இனி முடியும் என்று எண்ணி வாக்களித்தார்கள் -- NFTE சாதித்துள்ளது.   
எப்படி கிடைக்கும் போனஸ் ; மதிவாணன் கேட்டால் கிடைத்துவிடுமா ?  நாங்கள் அல்லவா முதல் சங்கம் என்றெல்லாம் கூவிய அபிமன்யூ கோவிந்தராசனார் போன்றோரின் குரல் அமைதியாகிப்போனது ஏனோ?  இரட்டை இலக்கம் -- NFTE ஒத்துக்கொண்டது என்று கூறிய கூற்று என்னவானது?
போனஸ் அடைந்தே தீருவோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் தோழர்.C.K. மதிவாணன் முழங்கியது நம் அனைவரின் செவியிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அகில இந்திய அளவில் போனஸ் கிடைப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் தலைவர். இஸ்லாம் அவர்களின் முயற்சியை பாராட்டுவோம் - நன்றி தெரிவிப்போம். இனியும் பணி தொடரும். நிர்வாகம் 3000 போனஸ் வழங்க சம்மதித்துள்ளது. ஆனால் போனஸ் வழங்கப்படும் வரை நமது போராட்டம் தொடரும்......

NFTE வடசென்னை மாவட்டம்.

Wednesday, 31 August 2016

கல்மண்டபம் கோட்டதலைவர் தோழர். A. மனோகரன் பணிநிறைவு பாராட்டு விழா 30.08.2016 அன்று கல்மண்டபம் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்றது.
தொழர். E.S. ஆனந்ததேவன் தலைமையேற்று நடத்திய இந்த விழாவில் தோழர். M. இராமநாதன் வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. மாநில பொருளாளர். C.ரவி வடசென்னை மாவட்ட தலைவர். வெங்கடேசன் தோழர். V.  பாபு மற்றும் எண்ணூர், துறைமுகம் கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பு செய்தனர்.

 நமது மாநில செயலரின் உரை அவரது சமீபகால வெளிநாட்டு பயணத்தின் அனுபவங்களையும் நம் நாட்டின் சூழ்நிலையையும் கலந்து பேசியதால் அனைவருக்கும் சுவாரசியமாக அமைந்திருந்தது. அதே நேரத்தில் நடைபெற இருக்கும் பொது வேலைநிறுத்தத்தின் முக்கியத்தையும் மாநிலசெயலர் விளக்கமாக விரிவாகப்பேசினார். கல்மண்டபத்தின் கோட்டப்பொறியாளர் மற்றும் உதவிப்பொதுமேலாளர் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.

NFTE வடசென்னை மாவட்டம்.

Monday, 29 August 2016

நமது மாநில  சங்கத்தின்  விரிவடைந்த செயற்குழு  கூட்டம்
மற்றும் செப்டம்பர் - 2 வேலை நிறுத்த ஆயத்த  கூட்டம் 29-08-2016
திங்கள்கிழமை அன்று... மதியம் 03.00 மணி அளவில்...
 நடைபெற்றது. 

கூட்டத்தில் தோழர்கள்  எம்.கே.ராமசாமி, சி.கே.மதிவாணன், சோலைராஜ், இளங்கோவன், ரகுநாதன், ஏகாம்பரம், டி.ஆர். ராசசேகரன்(CHQ).  மற்றும் TEPU  மாநிலச் செயலர் விசயகுமார், ஆகியோர் வேலைநிறுத்த கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். வேலைநிறுத்தத்தை ஆதரித்து மற்றும் கோரிக்கைகளை விளக்கி இடைவேளை விளக்க கூட்டங்கள் 15 மையங்களில்  01-09-2016 அன்று நடைபெறும். NFTE,TEPU, PEWA தலைவர்கள் பேசுவார்கள்.

சென்னை தொலைபேசி 
 
NFTE,TEPU, PEWA